Saturday, September 15, 2007

355. சாக்கடைக் கொசுக்களா நாம்? --- கேட்கிறார் கி.அ.அ.அனானி!

பதிவின் தலைப்பை, சன் டிவியில் வரும் 'குங்குமம்' விளம்பரம் ஸ்டைலில், வாசிக்கவும் :)
கடந்த 3 மாதங்களாக, தமிழ் வலைப்பதிவுகள் பக்கம் அதிகம் வரவில்லை. வழமையான காரணம் --- வேலைப்பளு ! ஏதோ 2-3 பதிவுகள் போட்டிருப்பேன்.

சரி, இப்ப பதிவின் மேட்டருக்கு! நண்பர் கி.அ.அ.அனானியும் (கிராமத்து அரட்டை அரசியல் அனானி --- இவர் ஏற்கனவே சிலபல பதிவுகள் எழுதி எனக்கு அனுப்பி, அவற்றை என் வலைப்பதிவில் பதிந்திருக்கிறேன் --- இந்த விளக்கம் கி.அ.அ.அ வை மறந்து விட்டவருக்கு அல்லது அறிமுகம் இல்லாதவருக்கு ;-)) பிஸியாக இருந்திருப்பார் போல இருக்கு! திடீரென்று இன்று மெயிலில் ஒரு மேட்டரை அனுப்பி, பதிப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்! மேட்டரைப் படித்தால், தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை :)

தமிழ்மணம் பக்கம் சென்று சில பதிவுகளை வாசித்தபின் விஷயம் ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரி தோன்றியது! புரியாவிட்டாலும் பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை தானே!

கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், கி.அ.அ.அ வின் கொ.ப.செ ஆக ஏற்கனவே ஆகி விட்டதாலும் (அல்லது ஆக்கப்பட்டு விட்டதாலும் :)) கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் !

இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் (இதற்கு வினை-மறுவினை என்பது, T-20 வகை கிரிக்கெட் போன்றது, எனக்கு 50 ஓவர் ஆட்டம் தான் ஓரளவு விளையாட வரும், அதனால் தான் கி.அ.அ.அ வையே விளையாட அழைக்கிறேன் :)) கி.அ.அ.அ மெயில் மேட்டர் பதிவாக கீழே !

எ.அ.பாலா
***********************
அன்புள்ள சுகுணா திவாகர்,

உங்களது " வேதனையோடு விலகுகிறேன் " என்ற பதிவு பார்த்து நெகிழ்ந்து போய் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உங்களது சாதி மறுப்பு என்பது கேள்விக்கிடமில்லாததுதன்..இதை உங்களை கருத்துத் தளத்தில் எதிர்பவர்கள் கூட ஒத்துக் கொள்வார்கள்..பின்னூட்டம் வாயிலாகவாவது ...


அப்படிப்பட்ட உங்களை வளர்மதி என்பவர் " ஜாதி புத்தி" என்பதாக சொல்லி திட்டி விட்டார்...நல்ல வேளையோ அல்லது கெட்ட வேளையோ அவர் பார்ப்பனரல்லாது போய் விட்டார் . ( அவர் பார்ப்பனரல்லர் என்பதையும் உங்களது பதிவின் மூலமாக....சொல்ல மாட்டேன்...சொல்லமாட்டேன் என்று சொல்லி ஒரு 6 நபர்களின் ஜாதிகளை சொல்லிக் காட்டினீர்களே...அதிலிருந்து தெரிந்து கொண்டேன்)...அவர் பார்ப்பனராக இருந்திருந்தால்..ஆ..சாதித் திமிரில் சொல்கிறான் என்று ஒரு கணமும் யோசிக்காமல் உடனே சொல்லலாம்...ஆனால் அது முடியாததாகி விட்டது...அதனால் வேதனையோடு விலகுகிறீர்கள்..அதற்கும் எதற்கும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை...இருந்தாலும்...நல்லதே நடக்கட்டும் ..என்று மட்டும் பொதுவாக கூறிக் கொள்கிறேன்.

பரவாயில்லை...நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்...மனிதன் தவறு செய்வது என்பது இயற்கை...அதைத் திருத்திக் கொள்வதும் இயற்கைதான்...... முன்னம் தாங்கள் சிலரை கருத்து தளத்தில் எதிற்காமல் வாய் கூசாமல் சாதியை சம்பந்தப் படுத்தி எழுதி எள்ளிய சில உதாரணங்கள் கீழே உங்கள் பார்வைக்கு....

"பாலபாரதியின் இயலாமையும் பாலாவின் பார்ப்பன ஜல்லியும்"

""'அப்பாவிப் பார்ப்பனர்க'ளின் மனதைப் புண்படுத்துகிறது என்று நினைத்தோ என்னவோ 'என்றும் அன்புடன் பாலா' என்ற நண்பர் தன்னுடைய பதிவில் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கிறார்."""

""ஆனால் அப்படி நடந்தாலும் 'என்றும் வம்புடன்' பாலாவோ அல்லது அவரது ஒண்ணுவிட்ட, ரெண்டுவிடாத தூரத்துச் சொந்தங்களோ அனானியாகவோ அநாமதேயங்களாகவோ வந்துகேள்வி கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். நாம் என்ன செய்யவேண்டும்? 'போடா பாப்பார ஜாட்டான்' என்று போகவேண்டியதுதான்.""


இப்படியெல்லாம் முன்னே பின்னே பார்த்திராதவரை கூட வாய்க்கு வாய் அவரது ஜாதியை குறிப்பிட்டு..குறிப்பிட்டு, நமக்கு இனிக்க இனிக்க வசை பாடினோமே..அப்போது மற்ற அல்லக்கைகளும் சுகமாக சொரிந்து விடும் போது நன்றாக இருந்ததே என்பதெல்லாம் மறந்திருந்தால் சற்று நினைவு படுத்திக் கொள்ளுங்கள்...

அதுவும் அந்தப் பதிவு என்னுடையது..ஆனால் போட்டதற்கு சாதி சொல்லி திட்டு எ.அ.பாலாவிற்கு:)))

வாழ்க எ அ பாலா !

அப்போது அவர் """"என்மேலேயே தனிப்படட் காழ்ப்புணர்வை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொஞ்சமும் அறமும் நேர்மையுமில்லாமல் ஒருவன் சாதியரீதியாக அடையாளப்படுத்திவிட்டபிறகு வெறுமனே சூன்யத்தையே உணர்கிறேன்."""" என்று பதிவெழுதவில்லைதான்

ஆனாலும் மனது கஷ்டப்பட சாத்தியக் கூறுகள் உண்டில்லையா...இது தெரிந்த ஒரு உதாரணம்...இது போல் எத்தனை தளங்களில் எத்தனை பேருக்கு எத்தனை சாதீயத் திட்டுகளை தந்தோமோ...அதனால் போகிற போக்கில் இந்த மாதிரி முன்னிட்ட தீக்களுக்கு ஒரு " பொது மன்னிப்பு " கேட்டு விடுங்கள்.

இப்படி தெரியாத ஒருவரை அந்த சாதியை பிடிக்காது என்ற காரணத்துக்காக " சாதியுடன் சம்பந்தப் படுத்தி " எழுதினீர்களே உங்களைப் பற்றி நங்கு அறிமுகமுள்ள..நேருக்கு நேர் சந்தித்துமுள்ள வளர்மதி குறிப்பிட்டுள்ளது சரியாகத்தானே இருக்கும் என்று சிறுபிள்ளைத்தனமான தர்க்கம் செய்யப் போவதில்லை.. ஏனென்றால் நீங்கள் சாதீயத்திற்கும் (atleast பிராமணர்களுக்கும்) எதிரானவர் என்பதை உங்களுடைய எழுத்து மூலமாக நன்கு அறிந்தே உள்ளேன்

இங்கு நான் பார்ப்பனரை பார்க்கவில்லை..பார்ப்பனீயத்தைதான் பார்த்தேன் ..பேசினேன் என்று ஜல்லியடித்தால்


1. ""நானும் சுகுணா மற்றும் வரவனையின் பிள்ளைமாரீயத்தை தான் பேசினேன் ""என்று காம்ரேட்"வளர்மதி" எதிர் ஜல்லியடிக்கக் கூடும்.+

2."""""'பார்ப்பனர்களும் இந்துத்துவவாதிகளும் நிரம்பியுள்ள சூழலில்.... """ என்று எழுதும் உங்களுக்கு பார்ப்பனீயம் அல்ல பார்ப்பனர்கள்தான் எதிரிகளாக தெரிகிறார்கள் என்று நான் ஜல்லியடிக்கலாம்.

மற்றபடி உங்களது பின் நவீனுத்துவம்...கவிதை ..பற்றியெல்லாம் நமக்கு எதுவும் தெரியாது...ஆனால் நன்றாக இருக்கும் என சிலர் வலையில் பேசிக் கொண்டிருப்பதை படித்ததுண்டு.

"மாறாதது என்பது எதுவுமில்லை...மாற்றம் என்ற சொல் தவிர அனைத்தும் மாறும்" என்பது போன்ற தத்துவங்களெல்லாம் உங்களுக்கு அத்துப்படி.நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. மற்றும்

""தாக்கினால் புழுக்கள் கூட தரை விட்டுத் துள்ளும்
பருந்து தூக்கிடும் குஞ்சு காக்கத் துடித் தெழும் கோழி
மூர்க்கமாய் தாக்கும் போது முயல் கூட எதிர்த்து நிற்கும்
சாக்கடைக் கொசுக்களா நாம்...காலத்தின் சக்கரங்கள் ""


இந்தக் கவிதை கேட்ட மாதிரி இருக்கிறதா ?ஆமாம் அவருடையதேதான்...ஏதோ இந்த இடத்தில் இந்த இரண்டு விஷயங்களையும் குறிப்பிட வேண்டும் என தோன்றியது.


வாழ்வில் நீங்கள் கொண்ட பணி சிறக்க வாழ்த்தி விடை கொடுக்கும்

கி.அ.அ.அனானி
*****************************

*** 355 ***

15 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

உங்கள் பதிவெல்லாம் இப்போ வாசிக்க முடியுது.....

இந்த பின்னூட்டத்துக்கும் மேற்கண்ட பதிவுக்கும் சம்பந்தம் இல்லை....

நல்லாருக்கீங்களா ??

dondu(#11168674346665545885) said...

நன்றாகச் சொன்னீர்கள். அவரவருக்கு வரும்போதுதான் வலி தெரியும். ஆனால் ஒரு சிறு திருத்தம். பிள்ளைமாரீயம் என்று எப்போதுமே சொல்ல மாட்டார்கள். அதையும் பார்ப்பனீயம் என்றே கூறிவிடும் நியாய உணர்ச்சிதான் பார்ப்பனரை வெறுப்பவரிடம் உண்டு. பெரியார் வழி வந்தவர்கள் அல்லவா. அப்படித்தான் இருப்பார்கள்.

உயர்சாதீயம் என்று போடக்கூட மனம் வராது அந்த நியாயஸ்தர்களுக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முகமூடி said...

நீங்களும் அப்போதே வெறும் சூன்யத்தை உணர்ந்து வூட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்து நடந்து அழுததை பதிவாக போட்டிருந்தால் உங்களோடு தண்ணியடித்தவர்கள் (அப்படி யாரும் இல்லையின்னா இனிமேயாவது உருவாக்கிக்கோங்க.. இந்த மாதிரி நேரத்துல உபதகவலுக்கும் ஆதாரத்துக்கும் உதவுவாணுங்க) வாங்க வாங்க பதிவு போட்டிருந்திருப்பார்கள்.

சுட்டியதற்கு நல்லது.. சுட்டிகள் தேட நேரம் இல்லை. இன்னமும் நிறைய சொல்லலாம். ஆனால் அவசியம் இல்லை. உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு.

இதைத்தான் ஒரு கேள்வியாக கேட்டேன். மொக்கை பல்கலைக்கழக வேந்தர் வரவனை எனக்கு மாமா பட்டம் அளித்து கவுரவித்திருக்கிறார்.

enRenRum-anbudan.BALA said...

//Anonymous said...
உங்கள் பதிவெல்லாம் இப்போ வாசிக்க முடியுது.....

இந்த பின்னூட்டத்துக்கும் மேற்கண்ட பதிவுக்கும் சம்பந்தம் இல்லை....

நல்லாருக்கீங்களா ??
//
Fine, Thank you !

said...

சூப்பர் செருப்படி!!! சம்மந்தப்பட்டோர் உண்ர்ந்தால் சரி!

பின்குறிப்பு: நான் பார்பனன் இல்லை.எனது எழுதி வெளிச்சம் போட்டு காட்ட நான் வெட்கமும் வேதனையும் அடைகிறேன். இந்நிலைமை உண்டாக காரணம் திராவிட ஜாதி ஒழிப்பாளர்தான் (?).

said...

டோண்டு அவர்களே
கருத்துக்கு நன்றி

கி.அ.அ.அனானி

said...

முகமூடி

உங்களது பின்னூட்டம் எ அ பாலவிற்கா அல்லது எனக்கா ? :))

தனி மனித தாக்குதலையும் வர்க்க அரசியலின் நீட்சியாகப் பார்க்கும் தவறான புரிதலே இத்தகைய செயல்பாடுகளுக்கு காரணம்...அனைத்து தனி மனிதர்களையும் வர்க்கக் குறியீடுகளாக (மட்டுமே) பார்ப்பார்கள்... இவர்களது (தனி மனித) செயல் பாடுகளில் உள்ள குறைகளை மட்டும் யாரும் கேட்டுவிட முடியாது.. பதில் சொல்லாமல் கேள்வி கேட்பவனின் யோக்கியதை மற்றும் வர்க்க குணங்களை ஆராயத் தொடங்கி விடுவார்கள் :)ஜாதியை ஆராய்வது அதில் ஒரு பகுதி :)))

said...

அனானி,

செல்ப் டிபென்ஸ்தான்..நானாக நாரையும் காயப் படுத்த நினைப்பது கிடையாது :)))

பின்குறிப்பு தேவையில்லாத ஒன்று..அனைவரும் சரியென்று படுவதை தைரியமாக செய்ய வேண்டும்.. அதே போல் தவறை திருத்திக் கொள்ளும் பக்குவமும் வேண்டும்.

கி.அ.அ.அனானி

said...

Hi Bala
Nice to see you after long time.

Nice villasal by K Triple A. I think posts like this are required for people who write on a friday night.

--CT

said...

CT

கருத்துக்கும், எனக்களித்த பெயருக்கும் (K triple A) நன்றி

கி அ அ அனானி

லக்கிலுக் said...

வலையுலகம் பல பிரச்சினைகளால் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும் வேளையில் இது ஒரு மொக்கை பதிவு என்பதில் எனக்கு சந்தேகம் ஏதுமில்லை.

- கி.அ.அ.அனானியோட அண்ணாச்சி உங்களுக்கு பின்னூட்டம் போட முயற்சித்து பிளாக்கர் சொதப்பலால் போட முடியலையாம். எனக்கு இந்த மேசேஜ் அனுப்பி உங்க இடுகையில் போட சொன்னார் ;-)

enRenRum-anbudan.BALA said...

//வலையுலகம் பல பிரச்சினைகளால் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும் வேளையில் இது ஒரு மொக்கை பதிவு என்பதில் எனக்கு சந்தேகம் ஏதுமில்லை.
//
"மொக்கைப் பதிவுத் திலகம்" உங்களிடமிருந்து இப்படிஒரு பாராட்டு கி.அ.அ.அ வுக்கு கிடைச்சதுன்னா அவர் உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் ;-)

//- கி.அ.அ.அனானியோட அண்ணாச்சி உங்களுக்கு பின்னூட்டம் போட முயற்சித்து பிளாக்கர் சொதப்பலால் போட முடியலையாம். எனக்கு இந்த மேசேஜ் அனுப்பி உங்க இடுகையில் போட சொன்னார் ;-)
//
ரொம்ப நன்றிங்க ;-)

said...

""லக்கிலுக் said...
வலையுலகம் பல பிரச்சினைகளால் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும் வேளையில் இது ஒரு மொக்கை பதிவு என்பதில் எனக்கு சந்தேகம் ஏதுமில்லை."""
///enRenRum-anbudan.BALA said...
"மொக்கைப் பதிவுத் திலகம்" உங்களிடமிருந்து இப்படிஒரு பாராட்டு கி.அ.அ.அ வுக்கு கிடைச்சதுன்னா அவர் உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் ;-)////


எனக்கு வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கிக் கொடுத்த எ அ பாலா அவர்களுக்கு நன்றி.

வலையுலகம் தீப்பிடிச்சு எரியுதா..எங்கே?எனக்கென்னமோ சிலரது வயிற்றெரிச்சலின் புகைதான் தெரிகிறது.


அது சரி.. வலையுலகில் மொக்கைன்னா எதெல்லாம் அப்படின்னு இந்தத் தொல்காப்பியர்தான் இலக்கணம் வடிப்பாரா? இல்லை இவங்கல்லாம் மொக்கை போடுறதுக்கு காப்பி ரைட் எதுனா வச்சுருக்காங்களா? எல்லா இடத்திலும் என் பதிவு மொக்கை அப்படீன்னு அழுவாச்சி பண்ணிட்டு வர்ராரே...பதிவைப் போடுறவங்களுக்கே கஷ்டமில்லை இவர் யாரப்பா நடுவில் மொக்கைக் கண்ணீர் விட்டுக் கொண்டு?

பாவம்.அவரது கண்ணீரைத் துடைத்து வலையுலகின் தீயை மேலும் பரவ விடாமல் தடுக்கும் படி ஃபயர் சர்வீஸ் வசதி செய்து தரும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முகமூடி பதிவிலும் குறிப்பிட்டே இருந்தேன்.பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும் உங்கள் இஷ்டம் என்று..இவரைப் போல் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பின்னூட்டம் போட்டு விட்டு என் பின்னூட்டம் ஏன் பிரசுரிக்கவில்லை ...என் பின்னூட்டம் ஏன் பிரசுரிக்கவில்லை என வலைப்பதிபவரப் போட்டு பிராண்டவில்லை... இது எப்ப நடந்ததா..இப்பத்தான் "சமீபத்தில்" போன வருஷம்.

அங்கங்க ஆப்பு அசையாமதான் இருக்கு...அவங்கவங்களா போயி ஏறி உக்காராதீங்க...சரியா ?

கி அ அ அனானி

said...

கி.அ.அ.அ சார்,
லக்கி லுக்க பிடிச்சு இப்படி உலுக்கிட்டீங்க :)

//அங்கங்க ஆப்பு அசையாமதான் இருக்கு...அவங்கவங்களா போயி ஏறி உக்காராதீங்க...சரியா ?
//
லக்கி லுக்கோட காரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்களே ;-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails